மனித மிருகம்
மிருகங்களின் சரணாலயம் சென்று
கண்டு மகிழும் மனித இனம்
ஏனோ இன்று
தன் தாய் தந்தையர் குடில் கொண்டிருக்கும்
முதியோர் இல்லத்திற்கு சென்று
அவர்களைக் கவனிக்க மறுக்கிறது!
மனிதர் பலர் ஒன்றாய் சேர்ந்து
அடைபட்டிருக்கும் முதியோர் இல்லம் காண
ஒரு சில மிருகங்கள் வந்து செல்கின்றன
விடுமுறை நாட்களில்...
தன் குழந்தைகளின் தொல்லை தாங்காது!
பெற்றோருடன் சேர்ந்து வாழ மறுக்கும் நீ
சுற்றத்தாருடன் மட்டும் இணைந்து வாழ
உன்னால் முடியுமா?
ஏன் இந்த முரண்பாடு?
இன்று நான் என்றால்
நாளை நீதானே!
உண்மை உணர்ந்தவன்தான் மானிடனே!
பகுத்தறிவு இல்லையென்றால் அவை மிருகம்தானே!