தினம் ஒரு பாட்டு இயற்கை - 20 = 154

குத்தாலத்தில் பெண்டுகளா
குளிக்கும் இளம் செண்டுகளா
கொட்டும் அருவியெல்லாம்
மெட்டுக்கட்டுது பாத்திகளா..!

மஞ்சத்தேய்ச்சி குளிப்பத கொஞ்சம் நிறுத்தி
எண்ணைத்தேய்ச்சி செத்த இளைப்பாருங்க..
ஆயில் பாத்தெடுத்து அருவியில குளிச்சா
தீராத வலிகளெல்லம் தூரப்போகும்ங்க..!

குத்தாலத்தில் பெண்டுகளா
குளிக்கும் இளம் செண்டுகளா
கொட்டும் அருவியெல்லாம்
மெட்டுக்கட்டுது பாத்திகளா..!

என்னம்மா முனியம்மா முதுகுல சுளுக்காம்மா ?
சுளுக்குக்கு மருந்து கொட்டும் அருவிதான் !
முந்தாணை விலகுது நெஞ்சக்குழி கிறங்குது
கொசுவத்தை இழுத்துப் போத்திக்க இறுகதான் !

குத்தாலத்தில் பெண்டுகளா
குளிக்கும் இளம் செண்டுகளா
கொட்டும் அருவியெல்லாம்
மெட்டுக்கட்டுது பாத்திகளா..!

யாராக இருந்தாலும் குரங்கிடம் ஜாக்கிரதை
ஜாக்கிரதையா இல்லாட்டி - ஜட்டி ஜாக்கெட்டுகள் தேராதே
பறிப்போன பின்னாலே பறிதவித்து லாபமில்ல..
குரங்கிடம் பூமால பழமொழி தெரியும்மில்ல…!

குத்தாலத்தில் பெண்டுகளா
குளிக்கும் இளம் செண்டுகளா
கொட்டும் அருவியெல்லாம்
மெட்டுக்கட்டுது பாத்திகளா..!

எழுதியவர் : சாய்மாறன் (4-Jul-16, 10:06 pm)
பார்வை : 93

மேலே