புரிந்தும் புரியாதது தானே
டாக்டரிடமும்
வழக்கறிஞரிடமும்
பொய் சொல்லக்கூடாது,
அப்போது தான்
"பீஸ்" கரெக்ட் பண்ண முடியும்!
கடன் வாங்குவதும்
கடன் சொல்லுவதும்
இயலாமையில் தொடங்கி
முயலாமையில் முடிகையில்
சொந்தமும் "தூரமாய்" விடும்.!
பணப்பிரச்சினை புள்ளிகளாய்
குணப்பிரச்சினை கோடுகளாய்
உயிர்வாசலில் ஆசை நீர் தெளித்து
அள்ளியிடும் வாழ்வுக்கோலம் தான்
தூங்கி எழுந்ததும் நாம் செய்வது
தினம் தினம் மீண்டும் மீண்டும்..!