சாரல்...!
மாலைச் சூரியன்
மயங்கும் வேளை,
மலர்கள் தலை சாய,
அன்பே..
நீயும் வா
என் தோளில் முகம் சாய்க்க!
மழைவருமுன் கூந்தலை
குடையாக்கு,
மெய்கள் ஒட்டிக்கொள்ளட்டும்
காற்றுக்கு மூச்சு திணறுட்டும்,
கண்கள் பேசிக்கொள்ளட்டும்,
கைகள் பற்றிக்கொள்ளட்டும்,
முத்தங்கள் குளிப்பாட்டட்டும்,
மூச்சு காற்று உடல் துவட்டட்டும்,
நாம்....
மவுனம் காப்போம்!