காதல் கொலை கவிஞர் இரா இரவி
காதல் கொலை ! கவிஞர் இரா .இரவி !
கணினியுகத்திலும் காட்டுமிராண்டிக் காலத்தை
கண்களில் காட்டும் உணர்வு காதல் கொலை !
பெரியார் இங்கே மீண்டும் பிறக்க வேண்டும்
புத்திக்கெட்ட மனிதர்களுக்கு புத்திப் புகட்ட வேண்டும் !
சொந்த மகளென்றும் பாராமல் கொல்கின்றனர்
சொந்த மகனென்றும் பாராமல் கொல்கின்றனர்!
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
கொன்ற உயிரைத் திரும்பத் தரமுடியாது !
பகுத்தறிவைப் பயன்படுத்துவது மனிதனுக்கு அழகு
பகுத்தறிவைப் பயன்படுத்தாதது மனிதனுக்கு இழுக்கு !
கௌரவக் கொலை என்பதில் கௌரவம் இல்லை
கேவலம் என்பதை உணர்ந்து திருந்திடுங்கள் !
ஆணவக்கொலையில் உள்ள ஆணவம்
அழிவுக்கு வழி வகுக்கும் மாறிடுங்கள் !
சாதிவெறி என்பது மனிதனை விலங்காக்கும்
சாதிவெறி வேண்டாம் மனிதனாய் வாழ்வோம் !
சாதி என்பது ஆதியில் இல்லை அறிந்திடுங்கள்
சாதி பாதியில் வந்திட்ட தொல்லை தெரிந்திடுங்கள் !
உயர்ந்தவர் தாழ்ந்தவர் சாதியில் இல்லை
ஒரு நிமிடம் சிந்தித்தால் சிந்தாது ரத்தம் !
ஊர் பேசும் என்று அஞ்சுவதை நிறுத்துங்கள்
உங்கள் குழந்தைளை மகிழ்வாய் வாழவிடுங்கள் !
உண்மையான பக்குமான காதல் என்றால்
ஒருபோதும் மறுப்புச் சொல்லாதீர்கள் !
மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
மகிழ்ச்சிப் படுத்துங்கள் குழந்தைகளை !
இன்று நேற்று உருவானது அல்ல காதல்
ஆதாம் ஏவாள் காலத்திலே உருவானது !
நல்ல காதலை முழுமனதுடன் அங்கீகரியுங்கள்
நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் மதிக்கப்படுவீர்கள் !
வேண்டாம் வேண்டாம் இனிமேல் வேண்டாம்
காதல் கொலை இனி எங்கும் வேண்டவே வேண்டாம் !