கங்கைகரை நின்று

கங்கைகரை நின்று
கண்ணீர் பாடும்
கவிதை கேள்!
அழகதன் மகளென
அபிநவத் திருவென
தாமரைத் தெருடென
தாழிசைத்
தொடர்பென-ஓடிடும்
கங்கைகரை நின்று
கண்ணீர் பாடும்
கவிதை கேள்!
பதியமிட்டாள் பார்வைகள்
இரண்டதில்
பறித்துவிட்டாளதை
அவரையின் சாயலில்
காளை மனம்
காதல் குணம்
மாற்றிடுவார் யாரோ?
மல்லிகைச் சரமென
மௌனத்தில் இசைந்தவள்
மாலையில் வீசிட
மனமென்ன சருகோ?
ஊர்வலம் போகிடும்
ஊடலில் வாடிடும்
சாகரம் கூடிடும்
சரித்திர-கங்கை
கரை நின்று
கண்ணீர் பாடும்
கவிதை கேள்!
சாதி மதம்
நிதம் ஆக்கிடும்
மேடையில் காசு பணம்
கூடி
போட்டிடும் நாடகம்!
காதல் மனம்
இரண்டொன்று கதறிட
ஆசைமுகம்-இனி
அடுத்தவன் பாத்தியம்!
காலையில் ரசித்திட
மாலையில் வெறுத்திட
காதல் கண்ணாமூச்சி
இல்லை-நீ
கேட்கையில் தந்திட எறிகையில் கொண்டிட
காதல் நீர் மேல்
எழுத்துமில்லை!
மனம் இரண்டற கலந்தபின்
இடைவெளி மூட்டி-நீ
பிரிந்திடப் பார்க்கிறாய்
கொடுமையடி!
புறமதை வெறுத்தவன் அகமதில் வீழ்ந்தவன் பாடிடும்
பைத்தியகாரனடி!
கங்கைகரை நின்று
கண்ணீர் பாடும்
கவிதை கேள்!
இரண்டற கலந்தவன்
இறந்திட துணிந்தவன்
கனவுகள் வளர்த்தவன்
கலைந்தபின்
கதறிடும்-கங்கை
கரை நின்று
கண்ணீர் பாடும்
கவிதை கேள்!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (6-Jul-16, 6:48 pm)
பார்வை : 499

மேலே