என்னிளம் சுனாமி

பகலெல்லாம் அந்தப் பாவை
என்னைக் கண்டு சிரிப்பாள்
நள்ளிரவில் நிலவாய்
என் மன வானில் சொலிப்பாள்

காணும் இளம் கண்களை எல்லாம்
ஈர்த்து வசிகரிப்பாள்
எனினும் ஏனோ
என் காதலையும் நிராகரித்தாள்

பூந்தென்றலாய் வந்திங்கு
என்னைத் தாலாட்டி சென்றவள்
இன்று ஏனோ
புயலாய் உருவெடுத்து
வெண் முத்து மேகத்தை
ஓட ஓட விரட்டிக் களைத்து
நீண்ட நீல வானத்தில்
தண்ணீர்தனைக் கோர்த்து
சொட்டுச் சொட்டாய் ஆரம்பித்து
சோவென அவள் இன்று
கண்ணீர் வடிப்பதேனோ?
காதல் கார்காலம் தானோ?

உன்னைக் காணவே தினம் வேண்டிய
இம்மண்ணின் மைந்தர்களை
இன்று நீ வந்து குளிரவைத்தாய்
ஓட்டையாய் ஆன
ஓசோன் மண்டலத்தின் வழியாய்
ஊடுறுவித்தாக்கும் சூரிய ஒளியால் ...
வாடி வதங்கி நிற்கும்
இளம் மரம் செடி கொடிகளுக்கு
மறுபிறவிக் கொடுக்கத்தான்
நீ இன்று இப்படி மாறினாயோ?
உனை எதிர்த்தவர்களைத்தான்
நீ சூரையாடினாயோ?
தினம் வேண்டி விரும்பிய உழவனுக்கு
போதும் போதும் என சொல்லும் அளவிற்கு
இன்ப மழைதனைப் பொழிந்து
ஊருக்குள்ளும் புகுந்து ஓடுறாளே
என்னிளம் சுனாமி - இன்று
என்னை தவிக்க விட்டுப்புட்டு...!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Jul-16, 10:12 pm)
பார்வை : 236

சிறந்த கவிதைகள்

மேலே