விண்மீன் கண்கள்

என் கண்கள் காண்பதெல்லாம்
இயற்கை எழில்களைத்தான்
எனினும் ஏனோ
உன் கண்கள்தான் பெண்ணே
கவர்ந்து ஈர்க்குது என்னை !

எழில் பாவை உனைக் கண்டால்
எழுந்தாடுதே என் உணர்ச்சிதான்
என்ன செய்வேன் அழகே!
கவிதை வடிக்காமலா இருப்பேன்!

சரியாய் மீசை வளராத என்னிடம்
வந்து பேசி ஆசை வளர்க்கும் பெண்ணே
காளையரை சுண்டி இழுக்கும் கண்ணே
தமிழ்தாய் தானே உனது அன்னை !

தானாய் தாவி வந்து
பானைப்பொறிக்குள் வீழ்ந்த மீனே
உன்னை சமைத்து உண்ணாமல் இருந்தால்
நான் இங்கு வீணே!

நீ வீசும் வலைதனில்
நான் சிக்காதிருந்தால்
படித்தக் குருடன் ஆவேன்
விண்மீனுக்கு தினம்
தூண்டில் போடும் கவிஞன் நானே!
என் இருளைப் போக்க வந்த
விண்மீன் கண்களை நீ வாழ்க!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Jul-16, 10:30 pm)
Tanglish : vinmeen kangal
பார்வை : 126

மேலே