கண் எனும் போர்வாள்

நிலவே!
வெகுதூரத்தில் இருந்து கொண்டு
என்னை ஏன் ஆட்டிப்படைக்கிறாய்?

தமிழ் நாணப் பெண்ணே!
தினம் மெளனமாய் இருந்து
கொல்லாதே - என்னை !

அழகே !
எதைக் கண்டும் மயங்காத
என் இதயத்தை எதற்காக மயக்கினாய்...

உன்னைக் காண - தினம்
துடியாய் துடிக்கிறது என்னிதயம்!
வெறும் கண் என்றால்
அதை நான் நம்பமாட்டேன்!

அன்பே!
என்னைத் தாக்க வந்த
போர்வாளெனச் சொல்
உனக்கு நான் அடிபணிவேன்!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Jul-16, 10:51 pm)
Tanglish : kan yenum porvaal
பார்வை : 83

மேலே