இதயம் இருக்கும் சக்தி இருக்காது
உன்னுடைய வலி
எனக்கு த்தெரியனும்
என்னுடைய வலி
உனக்குத் தெரியனும்
இவ்விரண்டு வலியும் மேலே
அவனுக்குத் தெரியனும்
அதை விட்டு நம்முடைய
இருவருடைய வலி வேறு
யாருக்கு தெரிந்தாலும்
அதனால் ஆகப்போவது
ஒன்னும் இல்லை
நாம் படும் வலியைக் கண்கொண்டு பார்ப்போர் கைக்கோட்டி சிரிப்பார்கள்
அதைப் பார்க்கும் நமக்கு
வேறொரு வலி வந்து சேரும்
அவ்வலியைத் தாங்கிட
இதயம் இருக்கும் அதில்
போதிய சக்தி இருக்காது