காதல் கொலை

காதல் கொலை வரம்புமீறல்
காதல் கொலை அத்துமீறல்
காதல் கொலை கோழைத்தனம்
காதல் கொலை அதிகப்பிரசங்கித்தனம்
காதலில் கொலைக்கு இடமில்லை
காதலில் கொலையிருந்தால் அது காதலில்லை
புரியாதோரை புரிந்துகொள்ள‌வைப்பதே காதல்
புரிந்துகொள்ளவில்லையா பிறகு உனக்கேன் அந்த‌ காதல்
காதலில் அன்பும் பாசமும் மட்டுமே இருக்கவேண்டும்
பொறாமை சந்தேகம் அதீத கோபம் எதற்கும் அனுமதியில்லை
காதல் ஒரு மலர்
காதல் ஒரு மழை
காதல் ஒரு மேகம்
காதல் ஒரு வானம்
காதல் ஒரு அழகு
காதலிக்க நன்றாய் பழகு
ஏற்காவிட்டால் விட்டு விலகு
கொலை வரை எண்ணம் சென்றால்
அது மனித புத்தி அல்ல...
விலங்கு புத்தி..
காதலித்த பெண்ணையும் அழித்து
தானும் தண்டனை பெற்று
அவரைச் சார்ந்தோருக்கு ஆழ்ந்த சோகமளித்து
தன்னைச் சார்ந்தோருக்கு இதயக் கஷ்டமளித்து
காதல் கொலையில் நீ சாதித்தது தான் என்ன..?
இதற்கு நீ கருவிலேயே அழிந்திருக்கலாம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Jul-16, 7:50 am)
Tanglish : kaadhal kolai
பார்வை : 131

மேலே