ஒரு சமூகமே சதிராடுகிறது
"உங்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கு" என்று செவிலியர் பெண் அந்த குழந்தையை தூக்கிவந்து காண்பிக்கும்போது அந்த குழந்தையை கைகளில் வாங்க துணிவில்லாமல் கண்ணில் நிறைந்த ஆனந்த கண்ணீரோடு அந்த குழந்தையை பார்த்தவனுக்கும்.......
காலையில் "எந்திரிம்மா ஸ்கூலுக்கு நேரமாச்சு எந்திரிம்மா" என்பவனுக்கும்.......
"இன்னும் ஒரு இட்லி சாப்பிடும்மா. இல்லேன்னா பதினோரு மணிக்கெல்லாம் பசிக்கும்" என்பவனுக்கும் ....
மாலை நான்கு மணிக்கெல்லாம் வேறு எங்கேயோ என்ன வேலையில் இருந்தாலும் வீட்டுக்கு போன் செய்து "பாப்பா வந்துட்டாளா" என்பவனுக்கும்....
இரவு பனிரெண்டு மணிக்கு தூக்கத்தில் லேசாய் இருமியவுடன் எழுந்து சென்று அவளை தொட்டுபார்த்து "என்னம்மா காச்சல் அடிக்கிதா" என்பவனுக்கும்..........
"அப்பா எனக்கு ஒரு lady bird சைக்கிள் வாங்கி தரிங்களா?" என்று கேட்க்கும்போது, "கொஞ்சம் பொறும்மா, இந்த மாசம் சம்பளம் வாங்கி கண்டிப்பா வாங்கிதாரேன்" என்பவனுக்கும் ............
இன்னும் சொல்லிகிட்டே போகலாம்..........
அவனுக்கு மட்டும்தான்யா தெரியும் நுங்கம்பாக்கம் சம்பவத்தின் முழு பரிமாண வேதனை..........
ஆனால் நடப்பது என்ன?
இப்படியிருக்குமோ? அப்படியிருக்குமோ? என்று தேடி தினம் கதை சொல்லும் வலைத்தளங்களை என்ன செய்யலாம்?
மதம் பிடித்த யானைகள் வலம் வரும் தொலைக்காட்சிகளில் அவரவர் கண்ணோட்டத்தில் உளறுகையில் கண்ணுக்கு தெரிபவர்களெல்லாம் காரி உமிழத்தோணுவதை எப்படி மறைத்துக்கொள்வது?
பிறர்க்கின்னா செயயாதிருத்தலே தர்மம் என்றிருக்கும் இந்த எல்லைகளை மீறி இத்தனை கர்மங்களை செய்யும் இவர்களுக்கும்
ஆண்டவன் அருள் பாலிப்பானா? இல்லை அவனும்
நகைத்துக்கொண்டு தான் இருப்பானா?