அவளின் அடையாளம்
பெற்றவரின்
உற்றவரின்
மற்றவரின்
வினவுகளையும்
தேடல்களையும்
விசாரணைகளையும்
தாண்டி ஒளிந்து தப்பி
தன் நம்பிக்கைக்கு
பாத்திரமான
காதலனை
அடைந்தாள்
அவள்...
அவளின்
அடையாளம் -
அனைத்தும்
தடுத்தும்
அருவியில்
குதித்து
மரணித்த
நதியாய் இப்போது!