கருப்பு வெள்ளை

இருள் பறவைகள் இரண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்த்
தன் உருவம்
இழந்து கொண்டிருப்பதாய்
விரிந்து கொண்டிருந்த
கருப்பு வெள்ளைக் கனவொன்று
முழுவதுமாய்த்
தீர்ந்து போகக் காத்திருந்த
ஒரு இரவின் மையப்புள்ளியில்
பனிப்பொழிவு பாதை ஒன்றுடனான
பூக்கள் சரிந்த
பள்ளத்தாக்கு முழுக்க
பனி போர்த்த மரங்கள்
இன்னும் சில மலர்களை
மீதம் வைத்திருக்க...
நான் தேடிக் கொண்டிருக்கிறேன்,
என் முந்தைய இரவுக்
கனவுகளை நிறைத்திருந்த
கருப்பு வெள்ளைப் பூக்களை...- கிருத்திகா தாஸ்நன்றி : கீற்று

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (8-Jul-16, 4:12 pm)
Tanglish : karuppu vellai
பார்வை : 496

மேலே