இணை

நீ வாசனை இல்லா பன்னீர்
எல்லாம் நிறைந்திருக்கும் வெற்றிடம்
நீ கண்ணுக்கு புலனாகும் காற்று
கமலா அகில் நீ
உறையும் ஊற்று
இனிக்கும் கண்ணீர்
உறவில்லை சொந்தம்
எரியும் பனி
உருகும் சுவாலை

எல்லாவற்றிலும்
எதிர்மறையான நீ,

எனக்கு மட்டும்
நேர்மறையாய்
இணையாய்
துணையாய்.

எழுதியவர் : ரதி ரதி (8-Jul-16, 12:27 pm)
Tanglish : inai
பார்வை : 76

மேலே