ரெளத்ரம் பழகு

"எப்போது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்,
எப்போது வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்"-பாரதியார்.

சில கிழமைகளுக்கு முன்பு,
காவல் வாகனம் மோதி பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் உயிர்நீத்தான்.
அதில்,வாகனத்தை ஓட்டி வந்த காவலர் தப்பியோட...
நம் மக்கள் பொங்கிவந்த ஆத்திரத்தை வாகனத்தின் மீது காட்டி அதனை அடித்து நொறுக்கினர்.
இதே போல கடந்த செவ்வாய் கிழமையன்று இரவு,
வழிப்பறிக் கொள்ளையனை விரட்டிச் சென்ற ஆசிரியை தடுப்பில் மோதி,படுகாயமடைந்து உயிரிழந்தார்.
அன்று கொள்ளையனை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனஅன்று கொள்ளையனை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அன்றும் ஆத்திரம் அடங்காமல் கொள்ளையன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டெரித்தனர்.
இவை உதாரணங்கள் மட்டுமே.நிகழ்ந்த,நினைவிற்கு வராதவை என இவை போன்று நூற்றுக் கணக்கில் அல்லது அதற்கு மேலும் நிகழ்ந்திருக்கலாம்.
ஆனால்,இது முடிவின்றி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
நம் அருகே.ஏன்,இதனை செய்திடும் மக்களில் சிலர் நம்முடனேகூட இருக்கலாம்.நாமாகவும் இருக்கலாம்.
இங்கு நான் சுட்டிக்காட்ட விழைவது நாம் செய்யும் நீதியை அல்ல.நம்மால்-
நம்மில் சிலரால் அறிந்தோ அறியாமலோ நிகழ்ந்திடும் அநீதிநம்மில் சிலரால் அறிந்தோ அறியாமலோ நிகழ்ந்திடும் அநீதியை.

சமகாலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய (சென்னை,உடுமலைப்பேட்டை)நிகழ்வுகளிலிருந்து நம்மில் வெளிப்பட்ட அச்சமும்,
முதற்சொன்ன நிகழ்வுகளில் நமது -அநீதிக்கெதிரான கோபத்தை வெளிக்காட்டிய விதமும் வருத்தம் கொள்ளச் செய்கிறது.
நமக்கேற்பட்ட தன்னல எண்ணத்தைக் கொண்டு நமக்கு இரக்கம் இல்லையென்று சொல்வது ஒரு வகையில் அபத்தம் என்றேபடுகிறது.அதோடு அந்நிகழ்வுகள் நம் ஒற்றுமையின்மையைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அநீதிகளைத் தடுக்க நினைப்பதும்
தர்மத்தை நிலைநாட்ட முற்படுவதிலும் பிழையில்லை.
ஆனால்,அதற்கான வழிமுறைகளும் முறையானவையாக இருக்க வேண்டுமல்லவா?
கொள்ளையன் பிடிபட்ட பிறகு அவன் ஓட்டி வந்த வாகனத்தை எரிப்பதுதான் தர்மமா?
அதனை செய்தது வேறு சிலராயிருந்தால்,
நம்மில் சிலர் செய்த தர்மத்தின்மீது நாமே மாசைத் தெளிப்பது சரியா?
அந்த வாகனம்கூட வேறொரு நபருடையதாய் இருந்தால்?

ஒரு காவலர் செய்த தவறுக்காக பொதுச் சொத்தைத் சேதப்படுத்தலாமா?

ஆத்திரத்தால் நிகழும் கோரங்களை அனுதினமும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம்.அவற்றை நிதானமாக கவனித்து நாம் நிதானத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அதேபோல,
வரலாற்றை அறிந்து நம் முன்னோர்களின் துணிவை-வீரத்தைக் கண்டு சிலிர்த்துப் போகும் நாம்
அவற்றைச் செயல்படுத்தாமல் படித்துவிட்டு பாதுகாப்பதில் பயனில்லை.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

எழுதியவர் : சக்திவேல் லோகநாதன் (9-Jul-16, 10:57 am)
பார்வை : 819

மேலே