காதல் என் சுவாசம் --முஹம்மத் ஸர்பான்

என் கண்களை தருகிறேன்.
உன் கனவினை திருடாமல் போவாயா?

அழகின் மலர்த்தோட்டம்
அவள் புன்னகை
அவளுக்கு காவலாய்
அமைந்த தோட்டக்காரன் காதலன்

அடையாளம் காட்டும் நிழல்களின்
பயணத்தில் இரு மனதின் மேலே
ஒரு காதல் மட்டும் பாதை இடுகிறது

உனக்கும் எனக்கும் பிடித்த
இதயம் எனும் உலகில்
மரணம் எனும் கல்லறை எதற்கு

கை பேசி மீது விரல்கள்
தொட்டால் கண்களும்
நனைகிறது வெட்கத்தால்...,
உன்னிடம் நான் கேட்ட
முத்த குறுஞ்செய்தியால்

கண்களின் இமை ஓரம்
படிந்த துளி கண்ணீரை
கவி எனும் கைக்குட்டையால்
நித்தம் நித்தம் துடிக்கிறேன்

பல காதல் இணையும்
வரை பொய் சொல்லும்
சில காதல் சாகும் வரை
சுவாசமாய் மெய்யாகும்

கண்களில் தூவும் காதல் மழை
மண்ணில் சருகாய் உதிர்ந்தது
காதல் நெஞ்சில் முள்ளாய் குத்துது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (9-Jul-16, 5:18 pm)
பார்வை : 117

மேலே