காதலுக்குள் நான் வாழ்கிறேன் --முஹம்மத் ஸர்பான்

கண்ணீர் எனும் கடலில்
தத்தளிக்கும் காகிதக்கப்பல்
காதல் பாடும் கவிதைகள்

வறண்ட மன தேசத்தை
மலராய் மலரச் செய்தவள்
காதலி எனும் கன்னிகை

காதலின் தனிமையில்
கனவின் இனிமையில்
இரு மனங்கள் மோதிரமாகிறது

அவள் கால்கள் மிதித்தால்
கவிதை குப்பை தொட்டியில்
அவள் கண்கள் பார்த்தால்
கவிதை நெஞ்சின் தொட்டியில்

கவி எனும் சொல்லில்
மலர்ந்த முகப் பருக்கள்
நெஞ்சின் காதல் என்பேன்

காதல் என்ற மலர்கள்
மனம் வீச வேண்டும்
அவள் கூந்தலில் நானாக

காதல் வந்தால் வீரனும்
குழந்தை போல் வாழ
ஆசை படுவான் அவள் மடியில்

கண்கள் கவிதை எழுதியது
காணாத போது உன் கண்ணீரால்
கண்ட போது என் கண்ணீரால்

வானம் உடைந்த பின்னும்
மண்ணில் உலாவும் தேவதை
என் முயல் தேசத்து சொந்தக்காரி

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (9-Jul-16, 5:32 pm)
பார்வை : 124

மேலே