நெஞ்சினிலே
காலை இளமாலையென
நிலை கொண்ட உன் முகம் கண்ட
என் இருவிழிகள் உறங்க மறுக்குதடா..........
உன் எல்லை தீன்ட
ஆசை அலை உண்ட என் இதயக்கடல் உன் ஓசை கேட்க
துடிக்குதடா........
கார்குழல் கலைத்து
பிறைநிலவை உதிர்த்து
உன் கரம் தொட்ட மலர் மொட்டை
சூடி என் எழில் பூக்க
அடம்பிடிக்குதடா........
உன் மெய் சேர்ந்திட
என் நிலை மறந்தே
உன் நிழல் தேடி
என் உயிர் அலையுதடா.......
மார்பினில் இடம்பிடித்து
மடியில் தலை சாய்த்து
உன் பிடிவிரலில் இம்மலர் சேரவே
பெண்மையும் கரைசேருமடா......
உன் பார்வையில் என்னை எடைபேட
அந்நினைவுகள் என்னை கொண்டாட
என் துனை தனிமையிலும்
நாணம் பிறக்குதடா.......