காதலும் குருதியும்
இறைவா
எங்களுக்குத்தான்
படைத்தாய் ஜாதிகளை
குருதிக்கும் ஏன்
படைத்தாய்?
உயிர் கலைகையில்
நாங்கள்
ஜாதி கலையவோ ..
ஜாதிகளை
குருதிக்கு
படைத்தாய்
காக்கை குருவிக்கும் படைத்துவிடாதே.
அவையாவது ஆனந்தமாய் பறக்கட்டுமே.
குருதியே
ஜாதிமாறி ஒன்றுபட்டால்
உயிரிழப்பு
உனக்குமட்டுமல்ல
காதலருக்கும்தான்
காதலர்களே
அழகிய தேவதைக்கு
மொத்த தானம் செய்கிறீர்
அவசர தேவைக்கு
ரத்த தானம் செய்வீரோ
காலம் உயிர்வாழ
உங்கள்
காதல் உயர்வாக

