கை பேசி

கை பேசி

போராளியின் கை கண்ட
எரி குண்டு
எதிரியை கொன்றது முன்பு ...

இன்று
கையசைக்க கருவி
பொய் சொல்ல ........வாயடிக்க
ஆபாச அவலங்களை அம்பலமேற்ற
பகலிரவு பாராமல் துடிக்கிறது
அவர் தம் பைக்குள்ளே !

சிறு பிள்ளை
வீனடிக்கிறது நேரத்தை தீராத மோகம் கொண்டு
கண்டதும் காணாததையும் பறிகொடுத்து
தொலைந்தது மடல்
காற்றிலே கரைகிறது
கட்டப்பட்டு சேர்த்த பணம் !

பறக்கும் புறா
வளர்த்தது ஆரோக்கிய மடல்
தபால் முத்திரை இல்லாமலே ..
இன்று
சர்வமும் கந்தலாகி கதிர் வீச்சில் கலக்கிறது
காசு பணம் காற்றோடு பறக்க

தாயன்பு ஏங்கிட
பேச்சுக்கு இடமில்லை
நண்பர்கள் உபதேசிக்க
கைபை கடன் பட்டிருக்க !

எழுதியவர் : தருமராசு (11-Jul-16, 7:12 pm)
Tanglish : kai pesi
பார்வை : 118

மேலே