அர்த்தநாரீசுரன்

💑அர்த்தநாரீசுரன் 💑

மனமே நான் சொல்வதை மட்டுமே கேட்டுநட
நீயில்லாமல் நானில்லை
நானில்லாமல் நீயில்லை
பிறகு எதற்கு இந்த போராட்டாமோ?

என்னில் சரிபாதி நீயென்று
மூளையின் வலப்புறமுள்ள என் மனமே!

இன்றுவரை என்னையும் வெகுவேகமாக முந்திக்கொண்டு அறியாமை என்னும் இருளினும் இருளிய இருட்டுக்குள் பயணித்தாய்!!!

பல சமயம் உடல் என்னும் உலகம் நன்மை மறந்தாயே?
இதை வினவிட நீ யாரென்று வினா தொடுப்பாய்?

இதோ நான் உன்னில்
சரி பாதி அறிவென்பார்
நான் உறங்கிய பின்னர் நீ செய்த வினைகள் எத்தனை?

விழித்து கொண்டேன் நீ செய்த வினைகளை புரிந்துணர்ந்தேனே!!!!!
மனமே -இதுவரை ஆசைப் பேணி உடல் வளர்த்தாய்
சிற்றின்பம் தேடி எனை வளர்த்தாயே!!!!!

என் அறிவே - நீயா விழித்துக்கொண்டாய்?
விழிக்க செய்தது நான் /என் என்ற மனமே!!!!!!!

உன் மதி கேட்டு நடப்பது உத்தமமே - இனி நம் உடல் என்னும் உலகம் நன்மைக்கே நல் வினை செய்வோம்!!!!!!!

மனமே மதியே ஆணாய் பெண்ணாய் -அர்த்தநாரி பொருள் பொதிந்த பகுத்தறிவே இருள் போக்கும் ஒளிச்சுடராம்!!!!!
இதில் ஆத்திகனும் நாத்திகனும் வேறில்லை என்றுணர!!!!!!

✒:மருதுபாண்டியன். க
மையக்கருத்து : திருமூலர்

எழுதியவர் : மருதுபாணடியன்.க (12-Jul-16, 7:05 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 142

மேலே