காதல் கவிதை
தேனினும் இனியது காதல்
தேவதை வீட்டு மகாராணியே
கொஞ்சம் கேட்டு ரசி
நான் கெஞ்சுவதை
காதல் யுத்த போராட்டத்தில்
கறையை உடைத்து காதலிக்கும்
நாம் உண்மை காதலர்களே
அடிக்கடி சண்டையிட்டால்
ஆயுள் நீடிக்கும் அதிசயம்
காதலுக்கு மட்டும் தான்
அலைபேசியில் கோவமாய் பேசி
புன்னகைத்து மகிழ்கிறேன்
அலைப்பை துண்டித்ததும்
செல்லமாய் பெயர் வைத்து
சினுங்கி சினுங்கி சொல்வேன்
கருவாச்சி என்று
காரணம் இல்லை இருந்தும்
சண்டை காரணமே உன்னுடனான
உறையாடலுக்காக தான்
என்னை நீ
பெற்றெடுக்கவில்லை
இருந்தும் அன்னையே
என்னை நீ
திட்டி வளர்க்கவில்லை
இருந்தும் என் தந்தையே
அன்னை மடியை
அலங்கரித்த நாம் இருவரும்
அலங்கரிக்க வேண்டும் மணவறையை
இன்ப துண்பத்தை பங்கிட்டு
இன்பமாய் வாழ்ந்திட வேண்டும்
என் தோற் சாய்ந்தே
உன் வாழ்க்கையும்
உன் மடிசாய்ந்தே
என் வாழ்க்கையும்
கழிந்திட வேண்டும்
என் உயிர் பிரிந்தாள்
உன் மடியில் பிரியட்டும்
அதுவும் ஆனந்தமே
கவிஞன் பாண்டிய ராஜ்