மறைமுகம் !!

சாக்கடையில் தினந்தினமும்
குளிக்கின்ற கூட்டம் ;
சந்தனத்தை குறை சொல்லி
போடுதம்மா ஆட்டம் .

நாக்கடையில் மலிந்து வரும்
மனதடியின் ஓட்டம்
நல்லவர் போல் நடிப்பதையே
படம் பிடித்து காட்டும் .

பா கடையில் பலவிதமாய்
கருத்து பரிமாற்றம் -அதில்
பஞ்சையான பாட்டும் சேர்ந்தால்
அதற்கும் ஒரு தோற்றம் .

பூக்கடையில் குவிந்திருக்கும்
நறுமலர்கள் கூட்டம் -அதில்
பூஜைக்கும் உதவாத
பூவுக்கும் வெள்ளோட்டம் .

போர்ப்படையில் புல்லுருவி
இருந்துவிட்டால் -மாற்றான்
ஓர் நொடியில் நசுக்கிடுவான்
இது தெரிந்த கூற்றாம் .

குள்ளநரி கூட்டங்களே
குவிந்திருக்கும் போது!
நல்ல நெறி வளர்வதர்க்கே
வழி வகைகள் யாது?.

எழுதியவர் : nellai thillai (24-Jun-11, 10:03 am)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 344

மேலே