என்னுயிர் தோழியே...

அன்பு செய்திட
அம்மா...

அரவணைத்து காத்திட
அப்பா...

உலகம் கற்றுத்தர
உறவுகள்...

உரிமையோடு உதவிட
உடன்பிறப்பு...

இன்னொரு அம்மவாய்
மனைவி...

இவை அனைத்தும்
மொத்தமாய்,
நட்பு!...

நாம் அழும்போது
விழி துடைக்கும்,
நாம் விழும்போது
உயிர் துடிக்கும்,
நாம் எழும்போது
கரம் கொடுக்கும்,

நட்பென்ற விதையொன்று
நமக்குள்ளும் வளரட்டும்,
தொலைதூரம் இருந்தாலும்
நிழல்போல தொடரட்டும்...

தோழியே...

நீ இருக்கும்வரை
உனக்குள்
என் நினைவிருக்க
வேண்டுகிறேன்.

நான் இறக்கும்வரை
என் நினைவோடு
நீ இருக்க
வேண்டுகிறேன்...

எழுதியவர் : sirajudeen (14-Jul-10, 8:15 pm)
பார்வை : 1276

மேலே