நிகழ்வுச் சுமை...
என்
ஞான விஸ்தாரம்
கருதியே,
நாளும் விரிக்கிறேன்
சிந்தனைச் சிறகுளை...!
சிறகுகளின்
இறகுகள் எங்கும்
ஒளிந்திருக்கின்றன
ஓராயிரம்
நிகழ்வுகளின் சுமைகள்...!
நினைவுகளில் மூழ்கி,
நிஜங்களை
தொலைத்து விடுவேனோ
எனும் அச்சம் எழுந்தாலும்
மறக்க மறுதலிக்கிறது
என் மனசு - உன்
நினைவின் சுகத்தை...!