மதுவே மனமில்லையா உனக்கு

மதுவே மனமில்லையா உனக்கு
மலர் போன்ற உடலெல்லாம்
மண்ணில் புதையுதடா
மனிதனின் மூலையெல்லாம்
மதுவே மயக்குதடா

நஞ்சம் விதைத்து
வஞ்சம் வளர்க்கும்
மதுவா உனக்கு வேண்டும்

பண்பை கெடுத்து
பகையை வளர்க்கும்
மதுவா உனக்கு வேண்டும்

சிறப்பை கெடுத்து
சீரழிய வைக்கும்
மதுவா உனக்கு வேண்டும்

வாழ்வை கெடுத்து
வளமை குறைக்கும்
மதுவா உனக்கு வேண்டும்

மதியை மயக்கி
மண்ணை கெடுக்கும்
மதுவா உனக்கு வேண்டும்.

கொஞ்சம் யோசியடா மனிதா.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (17-Jul-16, 8:53 am)
பார்வை : 203

மேலே