அவள் வரைந்த ஓவியங்கள்

ஆடாது அசையாது சிங்கம்
ஒன்று கண்டேன்
அதனிடம் அவள் பேசிக்கொண்டே வண்ணம் ரகசியம் செய்தாள் !

மரங்களும் மலைகளும்
ஒற்றைக்காலில்
நிற்பதை கண்டேன்
அவள் சிரித்துக்கொண்டே
இரண்டு விரல் மந்திரம்
செய்தாள்!!

மீண்டும் சிரித்தாளே! சிங்கம் அதுவும் சிரித்ததாம்
அவள் எச்சில் தொட்டு பரப்பிவிட்டாள்
பலித்துவிட்ட மந்திரம் போல்
மலைகள் மரங்கள் நடுவில் நதியென
சென்றதாம்!!!

ஒளிந்திருந்து அவள் பூசும் உயிருள்ள ஓவியங்கள் கண்டேன் -அதை பக்குவமாய் மடித்து பையினுள் வைத்தாள்!!!!!

அந்த மழலை விரல்களின் அகவை நான்காம் - அவள் பைக்குள் மறைந்த ஓவிய ரகசியம் நான் மட்டும் கண்டேன்
அதை திருத்தும் ஆசிரியை எவ்வாறு தான் அறிவார்? என் கவலை அதுவெனக் கொண்டேன்!!!!
சிரித்த சிங்கம் சொல்லிடுமோ?
ஒற்றைக்கால் மரமோ மலையோ கூறிடுமோ? அல்லது அவள் எச்சில் நதியேனும் சொல்லிடுமோ?????

எழுதியவர் : மருதுபாண்டியன். க (17-Jul-16, 1:27 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 77

மேலே