ஞாயிறு RECIPE சேமியா பவ்வா

ஞாயிறு விடுமுறை . உருப்படியாக புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வோம் .
செய்வோம் .
இல்லத்தரசிகள் இல்லத்தரசர்கள் இருவருமே செய்யலாம்.

RECIPE NAME : சேமியா பவ்வா

தேவையான
பொருட்கள் : வேண்டிய அளவு சேமியா அவல் .எண்ணெய் கடுகு போன்ற தாளிப்பு
பொருட்கள்

செய்முறை : தேவையான வெண் சேமியாவை துரும்புகள் போல் பொடியாக்கி
ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீ ல் பாத்திரத்தில் (வசதி உள்ளவர்கள் வெள்ளிப் பாத்திரத்திலும் )
போடவும் . அத்துடன் வேண்டிய அளவு வெள்ளை அவலையும் சேர்த்துக்
கலக்கவும் . தண்ணீரை ஊற்றி ஊற வைக்கவும் .
கவனம் : காம்பௌண்ட் அதிகம் ஊரக் கூடாது . FINISHED PRODUCT
பெயர் மாறி ரெசிபி பிளாஸ்டர் ஆப் பாரிஸோ என்று ஆகிவிடும்.

இப்பொழுது ஊறிய கலவையை தயாராக இருக்கும் தாளிப்பு வாணலியில் இட்டு
மிதமான சூட்டில் கிளறி கீழே இரக்கவும் .
சேமியா பவ்வா ரெடி
கணவனும் மனைவியும் இரண்டு தட்டில் ---புதிதாக மணமானவர்கள் ஒரே தட்டிலும்
சேமியா பவ்வாவை சுவைத்து உண்ணலாம்.
சேமியாவுடன் ஒரு செலஃபீ யும் எடுத்துக் கொள்ளலாம் .
படத்தை எழுத்தில் வெளியிடுங்கள் . பாராட்டுகளையும் அன்பையும் பொழிகிறேன் .
தமிழ் விரும்பிகள்---
ஆண்கள் ---இதை இடியாப்ப அண்ணாச்சி என்று சொல்லலாம்
பெண்கள் ---இதை இடியாப்பத் தங்கச்சி என்று அன்புடன் அழைக்கலாம்
------CHEF சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-16, 10:12 am)
பார்வை : 73

மேலே