கவிதை 102 வாழ்வில் இணைந்த செல்லக்குட்டி

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வாழ்வில் இணைந்த செல்லக்குட்டி
இன்பத்தை அளிக்கும் வெல்லக்குட்டி
துன்பத்தை அகற்றும் அன்புக்குட்டி

எலியை பிடிக்கும் புலிக்குட்டி
வலியை அகற்றும் மான்குட்டி
பாசத்தை காட்டும் நாய்க்குட்டி
நேசத்தை வளர்க்கும் பாசக்குட்டி

பாலை அருந்தும் கன்றுக்குட்டி
வேலை வணங்கும் பக்திக்குட்டி
கோபத்தை அகற்றும் முயல்குட்டி
சாபத்தை போக்கும் நாககுட்டி


சோம்பலில் திளைக்கும் பன்றிக்குட்டி
சாம்பலில் உறங்கும் சின்னக்குட்டி
பிள்ளைகள் விரும்பும் பனிக்குட்டி
பிரிவை வெறுக்கும் பெண்குட்டி

வலிமை உணர்த்தும் யானைக்குட்டி
எளிமை காட்டிடும் அணில்குட்டி
தொடர்ந்து வந்திடும் கரடிக்குட்டி
படர்ந்து வளர்ந்திடும் பாம்புக்குட்டி

உயிர் காக்கும் தோழக்குட்டி
பயிர் செழிக்கும் உறவுக்குட்டி
அன்பை வளர்த்திடும் பிள்ளைக்குட்டி
தனிமை போக்கிடும் உயிர்குட்டி

மொழி அறியாத மழலைக்குட்டி
வழி தவறாத வாத்துக்குட்டி
நாட்டை ஆளும் சிங்கக்குட்டி
வீட்டை விரும்பும் தத்துக்குட்டி

சேட்டைகள் செய்திடும் குரங்குக்குட்டி
வேட்டை ஆடிடும் சிறுத்தைக்குட்டி
எங்கிருந்தோ வந்த செல்லக்குட்டி
இங்கிருந்தே வாழ்த்தும் பூனைக்குட்டி

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (17-Jul-16, 10:55 am)
பார்வை : 82

மேலே