என் விவசாயிக்கு

ஏர் கலப்பை உழவின்றி
எக்கு தப்பாய் முளைத்து
நிற்கின்றன கலப்பின
கடலை செடிகள்!

வானம் பார்த்த பூமியில்
வானத்தை நோக்கி
தவமிருந்தே
இளைத்து நிற்கின்றன தென்னை!

அந்நியனின் சதியை அறியாமல்
தொழில்நுட்பம்
வேளாண் புரட்சி என
இயந்திரங்களுக்கு
உழவர்கள் அடிமையானதால்
காளைகளுக்கு காயடித்து
அடிமாடுகளாய் அனுப்பி வருகிறோம்
மலையாள தேசத்திற்கு!

தமிழா எப்போது மீட்டெடுப்பாய்
தன்மானத்தையும்
உழவுத்தொழிலையும்?

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (17-Jul-16, 12:56 pm)
பார்வை : 83

மேலே