மனசாட்சி

மனசாட்சி
கருவரை சன்னிதி களப்பிலக்கியத்தை
பாரத ரதிக்கு வேண்டப்பட்டதால்
கண்ணம்மா கன்னம் சிவந்தது
கன்னித்தமிழ் கந்தன் கைவிரல் பட !

பாய்மரக் கட்டிலில்
ஏற்றி இறக்கி பளுத்துப்போனதால்
கர்மவினை பட்டியலுக்கு
பங்கம் வராதிருக்க
ஜெயங்கொண்டான் பார்த்துக்கொண்டான்
சரீரத்தில் சவாரி செய்து கொண்டு !

இதனால் என்னவோ
கூண்டுக்குள்ளே புகுந்துகொண்ட புண்ணியகோடி
எண் கணிதத்தை உரசிப்பார்க்க
பஞ்சாங்கம் தள்ளிப்போட்டது சுதந்திரத்தை !

இனி எனக்கு
கந்தலும் வேண்டா ! காவியுடையும் வேண்டா !
காரணம்
என்னுடன் திரியும் மனசாட்சிதான்
எனக்கு எஜமான்
என்னுடன் பிறந்த ஆருயிர் நண்பன் !

இந்த வேண்டப்படாத ஜென்மத்திற்கு
காவலனாக இருக்க வேண்டுகிறேன் !
இனி எனக்கு வேரென்ன வேண்டும் !
என் மனசாட்சி என்னுள் என் குருவாய் வீற்றிருக்க !.


இப்போ
எனக்கு தெரிகிறது வந்தவழி
வெந்த சோற்றை விழுங்கி
வயிறு வளர்க்க வேண்டாமென்று !

எழுதியவர் : தருமராசு (17-Jul-16, 9:32 pm)
Tanglish : manasaatchi
பார்வை : 132

மேலே