அறிவியலின் ஆக்கிரமிப்பு

அலைபேசியை கையிலே வைத்து கொண்டு
அதனையே பேசுதற்கே பயன் படுத்தாது
சிலையாகி நின்றே சற்று நேரத்தில்
செல்பியாக எடுத்தலில் மகிழ்ச்சி காண்போர்
நிலைதடுமாறி எங்கேனும் வீழ்ந்து விட்டால்
நேரத்தில் காத்திடவே எவர்தான் முன்வருவர்!
தலைசாய்த்தே தன்னையே பார்த்து மகிழ்ந்து
தன்பேசியில் படமெடுத்து மகிழ் கின்றார்

மேடான இடம்நோக்கி தேடி சென்று
முகத்தையே கோணலாய் ஆக்கி நின்று
சூடாகவே தன்னையே படமாய் ஆக்கி
சுடச்சுடவே முகநூலில் பகிர்கின்றார்
படங்கள் பகிர்ந்தவுடனே அதற்கு விருப்ப
பகிர்வுகள் எத்தனையென எண்ணு கின்றார்
உடனுக்குடன் உலகத்தின் மூலை யெலாம்
உன்னுருவம் பரவிடத்தான் செய்யும் உண்மை
உனக்குத்தான் தெரியாதா? தோழா தோழி !

கழிப்பறையில், கடவுளின் இருப்பி டத்திலும்
கையிலே இருப்பதுதான் அலை பேசி
விழித்துத்து பார்த்தேதான் தம்விழிகள்
விழித்திரையின் பார்வையினை குறைக் கின்றீர்
வழியிலே வருவதுயார் என்றே பாராது
விழிகளையே அலைபேசி திரையில் வைத்து
அழிக்கின்றார் பொன்னான நேரம் தன்னை
அறிவியலின் அக்கிரமிப்புதான் இது தானோ ?

--கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (17-Jul-16, 9:42 pm)
பார்வை : 98

மேலே