இறுதிவரை மனம் கூடுதலே உறுதிநிலை
இறுதிவரை மனம் கூடுதலே உறுதிநிலை....!
ஏர்முகக் காற்று வசமாய் வீசினால்
பாரா முகங்களும் பல்லக்குத் தூக்கும்
வலுபெற்றுப் பதவியில் அமர்ந்தால்
எலும்பிற்கு அலையும் நாய்களாய் குழையும்
நேற்றுவரை நிந்தித்த நாவுகள்
போற்றித் துதித்துப் பாடும்
பொச்செரிப்பில் புணைந்துக் கதைத்தவை
பூமாலையுடன் வாயிற்படி தேடும்
வறுமை வாட்டி வதைக்கையில்
வெறுங்கையாய் பாசாங்கு செய்து ஒழியும்
வரவால் வளமாய் வாழ்வு செழித்தால்
உறவாய் வந்து பாசத்தை பொழியும்
எதிர்ப்புகள் ஏமாற்றங்கள் போராட்டமாய் கொண்டால்
உதிர்த்த உணர்வற்ற வார்த்தைகளால் கொல்லும்
புத்துயிர்த்து புகழ்சூடி தேரோட்டம் கண்டால்
வரித்து வாஞ்சையுற்று வானுயர்த்தி சொல்லும்
எத்திசை நோக்கி காற்று வீசுமோ
அத்திசையோடு நகரும் எச்சிலை
இருந்தாலும் இழந்தாலும் இறுதிவரை
உறவாய் மனம் கூடுதலே உறுதிநிலை!
கவிதாயினி அமுதா பொற்கொடி —

