அன்பு

பாசம் என்பது வெட்டியாக
பேசிக்
கொண்டிருப்பதில் இல்லை

வெவ்வேறு இடங்களில்
இருந்தாலும்
எந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும்
மனம் ஒன்றியிருப்பதே
அன்பு

அதை நட்பெனலாம்
காதல் எனலாம்
உலகத்தில் உள்ள
அன்பின் வார்த்தையில்
எதை வேண்டுமானாலும்
சொல்லலாம்
உண்மையாக இருக்கும்படில்

ஒற்றை வார்த்தையில்
சொல்ல வேண்டுமென்றால்
அன்பு

பேசாத மௌனங்கள் கூட
பேசிவிடும்
ஒற்றை துளி கண்ணீர்
சிந்திவிடும்
விடியாத இரவுகள்
விடிந்துவிடும்
சாயாத தோள்கள் சாய்ந்துவிடும்

அன்பு


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Jul-16, 11:27 pm)
Tanglish : anbu
பார்வை : 782

சிறந்த கவிதைகள்

மேலே