என் காதல் மனைவிக்கு

அது ஒரு காலை நேரம்
காத்திருந்து காத்திருந்து சூரியன் ஆவல் முடியாமல்
என் அவள் முகம் காண முந்திக்கொண்டு காத்துகிடந்தான் எனனுடன்!

ஆனால் என் அவளோ - எனக்கே தரிசனம் தந்து வெற்றி பெறச்செய்தாள்!!


இப் புவி வென்று பொக்கிசங்களுடன் மேகக்கூட்டங்கள் விரைந்து
என்னுடன் போட்டியிட்டு வந்தாலும் -என்னிடமே அவள் அந்தரங்க இதயத்தை சிறை கொடுத்து வெற்றி பெறச்செய்தாள்.!!!

இமயம் வரை நான் இன்னல் சுமந்து வந்தாலும் என் அவளின் புன்னகையே போதுமான கொள்ளளவு!!!!

என் வாழ்க்கையின் இலக்கு அவளிடம்
நீ என்றேன் -விடா முயற்சி என்னும் கலையை கற்றுணரச்செய்தது என்னை கரம்பிடித்ததாள்!!!!!

இன்றும் தொடர்கிறது -என் அவளால் ஆன வெற்றி பயணம்!!!!

தாயில்லை என்று ஏங்கிய காலம் - என் அவளோ
தன் உயிரை வித்தாக்கி
அழகு, மகிழ்ச்சி,பெருமை
இவை அனைத்தும் ஒரே பரிசாய் கொடுத்தாள்!
அவள் உயிரை -என்
குழந்தையாய் கொடுத்தாள்!!!!

எத்தனை மெனக்கெட்டாளோ -என் அகமகிழ!
ஆம் -அன்று நான் ஈன்ற இரு துளிஆனந்த கண்ணீரே போதுமென்றாள்!!!

இன்றும் காலனின்
நேர் -எதிரியாய்
என் உயிர்மூச்சுக்குள் கலந்து நின்று எங்கள் காதலுக்கு சாகா வரம் அளித்தவள்!!!


ஆயிரம் கவி உரைத்தாலும்
என்அவளுக்கு காதல் பரிசாய் போதுமானது ஒரு உண்மையான வாக்கியம்

"நான் என்றும் உன்னை நேசிக்கிறேன் "

இப்படிக்கு.,
உன் காதல் கணவன்
மருதுபாண்டியன்😍😍💙💚💙

எழுதியவர் : மருதுபாண்டியன். க (19-Jul-16, 8:43 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 369

மேலே