கதவு திறந்திருக்கு-கங்கைமணி

கதவு திறந்திருக்கு-உன்
நினைவென்கோ போயிருக்கு,
காதல் பறவைரெண்டை-உன்
கண்கள் பார்த்திருக்கு.,
கொதித்து உடலிற்கு
குடத்தில் நீரிருக்கு.,
பட்டு உடுத்தி இந்த
மொட்டு பூத்திருக்கு.
களவுக்கதிரவனே கன்னம் வருடாதே !
காதலன் வரவுக்காய் கன்னி காத்திருக்காள் !.
-கங்கைமணி