நெருப்புடா

தனக்கு நேர்வது
இன்னதென்றே
தெரியாத சிறுமிகள்
புணரப்பட்டு
புதைக்கப்பட்டதை
சகித்துக்கொள்ள
முடியாமல்...

தன்
சகோதரிகளை
ஆடையின்றி ஓடவிட்டு
சுடப்பட்டதை
காணமுடியாமல்...

தன் சகோதரர்களின்
வாயில் சிறுநீர் கழித்து
முகம் சிதைத்துக்
கொன்றதை
பொறுக்கமுடியாமல்...

கொத்துக்கொத்தாய்
தன் இனம்
அழித்த
போரை
நிறுத்துவதற்காகவும்

மூன்று
நிரபராதிகளை
மீட்ப்பதற்காகவும்

செங்கொடியும்
முத்துக்குமாரும்
தங்கள்
தேகத்தில்
படர விட்டார்களே

அது அது
நெருப்புடா
முடியுமா.?


- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (19-Jul-16, 7:57 pm)
பார்வை : 185

மேலே