காதல்

காற்றில் மேகங்களாய்
கால்கள் மயங்கி அலைகின்றதே...
சேற்றில் புதைந்த
செந்தாமரையாய் முகம் சிரிக்கின்றதே...


கண்ணுக்குள் நுழைந்தக் காதல்
நெஞ்சில் விரிந்து
விண்ணில் பறந்திட
எனைத் தான் அழைக்கின்றதே...
காதல் எனைக் கட்டி இழுக்கின்றதே......
காற்றில் மேகங்களாய்......


உருண்டு விழும் பாறைகளாய்
உள்ளம் கொண்டிருந்தேன்...
உளிகள் விழுந்த அழகுச் சிலையாய்
உருவம் மாறி நின்றேனே......


பனி விழும் பூக்களில்
தேன் தேடும் பட்டாம் பூச்சிகளாய்
வெற்று காகிதத்தில் ஏதோ?... தேடி
ஒற்றை விரல் பிடித்து அலைந்தேனே......


இரண்டு மூன்று இதயங்கள்
என்னுள் துடிக்க உணர்ந்தேனே...
ஏகாந்த இன்ப வெள்ளத்தில்
மூழ்கி மூழ்கியே எழுந்தேனே......
காற்றில் மேகங்களாய்......


மாலை நேர மேகம் பார்த்து
பாலை மனம் மையல் கொண்டதோ?...
மணம் கமழும் மஞ்சரி நினைத்து
வண்ணப் புயல் மையம் கொண்டதோ?......


கோடை மழை பொழிந்து
ஓடையில் ஓடும் ஓர் இலையாக
மோக மழையில் தவழ்ந்து
வேகமாய் நான் தொலைந்தேனே......


தேங்காய் திண்ணும் எலி போல
தூங்காது என்னகம் விழிக்கின்றதே...
வாசம் போடும் கோலம் போல
என் வாலிபம் புதுக் கோலம் பூணுதே......
காற்றில் மேகங்களாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jul-16, 2:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 172

மேலே