அச்சமும் மடமும் அரிவையர்க்கு இழுக்கு

அச்சமும் மடமும் அரிவையர்க்கு இழுக்கு
மிச்சமும் மீதியும் ஆடைஅணி வழக்கு
கொச்சைப் பட்டாலும் எச்சமின்றி வாழ
காப்பர் டீ போடும் கருத்தான கன்னியிளசு

போக்கிமான் கைப்பற்ற போர்முக சிப்பாயாய்
வீதியிலே விரைந்து திரியும் வாலிபங்கள்
காலத்தை விரயமாக்கும் கணியிழி விகற்பங்கள்
காரியத்தை முடங்கவைக்கும் முகுளத்தின் முடுகாடுகள்

பார்க்க பார்க்க பிடிக்கும் என்று
பாவையை மடக்க தடம் எடுத்து
படியாவிட்டால் பழியாய் கொல்வது
விடியா இருளின் வெறிநாய் ஆட்டங்கள்

இரவை பகலாக்கும் பணி ஓட்டம்
பகலை இரவாக்கும் பஞ்சணை காட்டம்
அம்பலமாகாது அரங்கேறும் விபச்சார திரைமறை
ஆணுறையால் அடைப்பட்டது கால்சென்டர் கழிவறை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாம்
குதர்க்கமாய் புரிந்த மேட்டுக் குடிகள்
கூடி சர்வமாய் குலவி விட்டு
சலிப்பு தட்டின் சர்ச்சையின்றி பிரிகிறது

அம்மணமாய் கிடக்கிறது கலாச்சாரப் பிணம்
சந்தியில் புணருது பண்பாட்டின் மீதம்
வரையரை தாண்டிய ஆண்பெண் உறவு முறி
வீதிக்கு வராதவரை அதுவே கற்பு நெறி!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Jul-16, 1:30 pm)
பார்வை : 55

மேலே