அந்த வீடே துணை
தொட்டு தொட்டு ஆசை ஆசையாய்
கட்டி வைத்த வீடு இது என் வீடு
என்று மெத்த பெருமையுடன் ,
இல்லை, இல்லை இறுமாப்புடன்
இருந்து வந்தேன் ; ஆனால் இன்று
அந்த 'என் வீடு' இல்லை
நான் ஆசையாய் பெற்று வளர்த்த
'என் பிள்ளைகளும்' என்னோடு இல்லை
'நான்' தனி மரமானேன் .
இப்போது உணர்கின்றேன் 'என் வீடு'
'என் பிள்ளைகள்' யாதும் என்னிடம் இல்லை
'நான் யார் ' என்பது தெளிந்தேன்
'அவனில்' மெல்ல மெல்ல சேர்வதை உணர்ந்தேன்
இனி வீடும் இல்லை உறவும் ஒன்றும் இல்லை
அந்த 'வீடே' துணை வேறொன்றும் இல்லை பராபரமே .