வீண்

சூரிய உதயம் இல்லா பொழுது வீண்

தென்றல் இல்லா மாலை வீண்

நீலா இல்லா பெளர்ணமி வீண்

வாசம் இல்லா மலர்கள் வீண்

வசந்தம் இல்லா காற்று வீண்

கனவுகள் இல்லா நித்திரை வீண்

ஆசைகள் இல்லா அனைப்பு வீண்

பரிச்சயம் இல்லா மோகம் வீண்

சமாதானமில்லா அன்பு வீண்

சமத்துவமில்லா உயிர்கள் வீண்

நம்பிக்கை இல்லா தோழமை வீண்

சேர்ந்த பின் பிரியும் காதல் வீண்

கட்டுப்படுத்தும் உறவுகள் வீண்

புரியாத கல்வி வீண்

பகுத்தறிவு இல்லா சிந்தனைகள் வீண்

சமாதானத்திற்கு தூதுவன் வீண்

அற்பணிப்பு இல்லாத வேலைகள் வீண்

கட்டுப்பாடு இல்லா கோட்பாடுகள் வீண்

முன்னேற்றம் இல்லா வளர்ச்சி வீண்

தேடல் இல்லா உழைப்பு வீண்

பாசாங்கு பேச்சுகள் வீண்

வெளிப்படுத்தாத உணர்ச்சிகள் வீண்

சந்தோசம் இல்லாத சிரிப்பு வீண்

அக்கறை இல்லா சமூகம் வீண்

ஆதரவு தராத சொந்தங்கள் வீண்

காசு கொடுத்து கும்பிடப்படும் கடவுள் வீண்

எல்லாம் முடிந்த பின் வரும் உதவிகள் வீண்

முடிவு எட்டாத விவாதம் வீண்

இருக்கும் போது பார்க்கா கண்கள் இறந்தபின் அழுவது வீண்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (20-Jul-16, 9:32 pm)
Tanglish : veen
பார்வை : 185

மேலே