மறதி

மறதி என்று ஒன்று இருப்பதால் தான்
நாங்கள் உயிருடன் நடமாடுகின்றோம் என்கின்றனர் தன்
வாழ்க்கையை தொலைத்த சிலர்.

மறதி என்று ஒன்று இருப்பதால் தான்
நாங்கள் எங்கள் துயரங்களை மறந்து வாழ்கிறோம் என்கின்றனர் தன்
பெற்றோரை இழந்த குழந்தைகள்.

மறதி என்று ஒன்று இருப்பதால் தான்
என் காதலி என்னை மறந்துவிட்டாலோ என்று
புலம்பும் காதலன்.

மறதி என்று ஒன்று இருப்பதால் தான்
உன் கடுஞ்சொல்லை மறந்து வாழ்கிறேன் என்கின்றனர்
ஒரு சில குடிபஸ்த்தர்கள்.

மறதி என்று ஒன்று இருப்பதால் தான்
எங்களை மறந்துவிட்டார்களோ எங்கள் பிள்ளைகள்
என்று குமறுகின்றனர் முதியோர் இல்லத்து வாசிகள்.

மறதி என்று ஒன்று இருப்பதால் தான்
நான் அடித்தாலும் என்னை கட்டி அணைகிறது என் குழந்தை
என்று கண்ணீர் விடும் தாய்மார்கள்.

மறதி என்று ஒன்று இருப்பதால் தான்
நாங்கள் பரிட்சையில் தேர்ச்சியடையவில்லை
என்று வருந்துகின்றனர் சில மாணவர்கள்.

மறதி என்று ஒன்று இருப்பதால் தான்
நாம் மகிழ்ச்சியாய் இருக்கும்போது கடவுளை மறக்கிறோம்.

இந்த மறதியே ஒருவன் தூக்கத்திற்கும், தூக்கமின்மைக்கும் காரணமாக வாழ்கிறான்
இனி மறந்து விடுவோம் துன்பங்களை
மறவாமல் தொழுவோம் இறைவனை.

-- அனிதா

எழுதியவர் : கவிதை (20-Jul-16, 8:27 pm)
Tanglish : maradhi
பார்வை : 128

மேலே