அவள் தொடுத்த பூக்கள் -அழகிய தமிழ் மகள்
என் வாசல் வந்த
தேவதையே
உள்ளே வர யோசனையோ?
பட்டு உடுத்தி வந்தவளே
நான் வரச் சொன்ன நேரமென்ன
நீ வந்து நிற்கும்
நேரமென்ன
ஏன் இந்த தாமதமோ?
என் பட்டு வேட்டி களைஞ்சிடுச்சே - நீ வந்து
பார்க்குமுன்னே
பொய் சினம் வந்து
நான் மலர
உன் கன்னங்குழி சிவந்திடுதே!
கையில் என்ன கூடையடி
என்னை மேலும் கவிழ்த்து பிடித்திடவா?
சேவல் என்றே பிடித்துகொள்ளேன் -உன்
கால் கொழுசு மணிகள்
நானும் சுத்திடுவேன்!
ஏன் இந்த பார்வையடி
என் ஆண் வெட்கம் கண்டிடவா
மீசை மொத்தம் மயங்கிடுதே
மாமன் முரட்டு நெஞ்சும்
உடையுதடி!
உன் கால்விரல் கோலம்
ஏனோ
பிஞ்சு விரல் நோகுமடி
காலணியாய் வந்திடவா?
நம்ம ஊர்சேலைக்கட்டி
ஏன் இத்தனை மடிப்பு கொண்டாய் -அதில் என்னை மட்டும் விட்டுவிட்டு??
அதில் மாமன் மனம் நொந்திடுச்சே
வயல் பக்கம் போகமாட்டேன்
மாடு ரெண்டையும் பூட்ட மாட்டேன்
உன் நினைப்பாய் படுத்துக்குவேன்
நீ இரண்டில் ஒன்று சொல்லும் வரை!
மாமன் நெஞ்சு உள்ளே வந்த
வீட்டுக்குள் வர யோசனையோ?
நீ தொடுத்த பூக்கள் போதுமடி
நான் உனக்கு மாலையிட!
பாண்டி நாட்டு தமிழச்சியே
உன்
புன்னகை சொன்னப்பக்கம்
தாலி ஒன்னும் மிஞ்சி ரெண்டும் வாங்கிவரேன்!
வைகாசி பொறந்தாச்சு -என் அழகிய தமிழ்மகளே 32ம்
தேதி வச்சு மாமன் வந்து
நந்தனம் வருடம் கைப்பிடி(த்தேன்)ப்பேன்!!