மறுக்கபட்ட காதல் ஒருநாள் மதிக்கப்படும்
அனைவருக்கும் காதல் கனியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது இனிக்குமா கசக்குமா என்பதில் தான் சந்தேகம். கார்திக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு நெருங்கிய தோழி இருந்தால். தனது நேரத்தை அவளுடனேயே மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தான். அவளும் அப்படித்தான் தனக்கு கிடைக்கும் நேரத்தை கார்திக்குடனே கழிக்கலானாள். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை அத்தனை பாசம் அவர்களுக்குள். அரட்டை, சிறு சிறு அன்புச் சண்டை என இவர்களின் பாசப் பட்டியல் மிக நீளம். இவர்களின் பாசம் மிகுந்த நெருக்கம் அனைவரையும் காதல் தானோ என்று யோசிக்க வைத்தது. ஒருநாள் கார்திக்கின் மனதில் காதல் மலர்ந்தது. இத்தனை நெருக்கமான அவளை ஒருநாளும் தன்னால் பிரிய முடியா என்பதை உணர்ந்தான். தனது காதலை அவளிடம் சொல்வது என்று முடிவு செய்தான். அன்று மாலை இருவரும் கல்லூரி சாலையில் நடந்து சென்ற போது கார்திக் மிகவும் அழகாக தனது காதலை அவளிடம் வெளிப்படுத்தினான். நாம் இரண்டு வருடங்களாக பழகி வருகிறோம், நான் உன்னை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறேன், உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது, உன் முகத்தில் இருக்கும் சிரிய மாற்றத்தை வைத்து உன் மனநிலை என்ன என்பதை கூட என்னால் உணர முடியும். அதுபோல உனக்கும் என்னை பற்றி தெரியாதது ஒன்றுமில்லை. என் மனதை கவர்ந்த பெண் நீ என்பதை நேற்று நான் உணர்ந்தேன். என் இன்ப துன்பதிலும் என்னுடன் துணையாக நின்றது நீ என்பதை உணர்ந்தேன். இந்த துணை எனது வாழ்நாள் முழுவதும் எனக்கு வேண்டும் நான் உன்னை நேசிக்கிறேன், காதலிக்கிறேன். என் தோழி இன்று எனக்கு மிகவும் அழகாக தெரிகிறாள் என்று மிக அழகாக தனது காதலை வெளிப்படுத்தினான். அவள் கார்திக்கிடம் எதும் கூறாமல் சென்றுவிட்டாள். மறுநாள் அவள் கல்லூரிக்கு வரவில்லை, கார்திக் நாள் முழுவதும் ஏதோ போல் இருந்தான். மீண்டும் கல்லூரிக்கு வந்த அவள் கார்திக்கிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். இருவருக்கும் இடையில் இடைவெளி வந்தது. அவள் மேல் கார்திக் கோபம் கொண்டிருந்தான். அந்த இடைவெளி கடைசி வரை தொடர்ந்தது. கல்லூரி படிப்பு முடிந்ததும் அவளுக்கு திருமணம் நடந்தது. காதல் ஒருமுறை தான் வருமா என்ன? அப்படி பார்த்தால் இங்கு யாருக்கும் திருமணம் நடக்காதல்லவா! கல்லூரி நாட்களுக்கு பிறகு கார்திக் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேளை பார்த்தான். அவனது வாழ்கை நண்பர்கள், விளையாட்டு என மகிழ்ச்சியாக சென்றது. கார்க்கின் வாழ்வில் மீண்டும் ஒரு நெருங்கிய தோழி. இணை பிரியாத இவர்கள், அவ்வளவு நெருக்கமான நண்பர்களாக வலம் வந்தார்கள். இது போதுமே இங்கே காதல் பிறக்க. இந்த முறை சற்றே வித்தியாசம் கார்திக்கின் மேல் அவள் காதல் கொண்டாள். கார்திக்கின் கைபேசி சினுங்கியது அவளிடமிருந்து தான் அழைப்பு, தனது காதலை மிகவும் நேர்த்தியாக அற்புதமாக வெளிப்படுத்தினாள். நீ எப்போதும் என்னை சிரிக்க வைக்கிறாய், யாரையும் காயபடுத்தாத குணம், உன்னுடைய குடும்பம் மிகவும் அழகானது, இவ்வளவு பொறுப்பாக உன் பெற்றோறை பார்த்துக்கொள்ளும் நீ என்னையும் கடைசி வரை நன்றாக பார்த்துக் கொள்வாய் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை என்று தன் காதலை வெளிப்படுத்தினாள். கார்திக்கும் அவள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினான். காதலர்கள் ஆனதும் நண்பர்களாக இருந்ததை காட்டிலும் நெருக்கம் அதிகரித்தது. அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வந்து சென்றன காதலில் ஊடலும் கூடலும் வருவது தானே. இப்படியாக ஒரு வருடம் இவர்களின் காதல் தொடர்ந்தது. அவள் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டைகள் போட்டாள். அவை அனைத்தும் தேவையற்ற சண்டைகள், ஆனால் அவளுக்கு அது தேவையான சண்டைகள் என்று கார்திக் இறுதியாக உணர்தான். ஆம் அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்தது. இவளும் அந்த பணக்கார மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்தாள். வாழ்கைக்கு பணம் தான் முக்கியம், பாசம் மட்டும் போதது என்று காதலை முறித்துக் கொண்டாள். கார்திக்கிற்கு ஒருதலை காதலை காட்டிலும் இது சற்று அதிகமாகவே வலித்து. தன் கல்லூரி தோழியை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தான். தன்னை ஒரு வருடம் காதலித்து தூக்கி எறிந்துச்சென்ற காதலியை காட்டிலும் தன் காதலை ஏற்காத அவள் மேன்மையானவள் என்பதை உணர்ந்தான். அவள் தன்னை ஏற்காதது நிச்சயமாக தன் நன்மைக்கு தான் என்பதை புரிந்து கொள்ள ஐந்து வருடங்களை எடுத்துக் கொண்டேனே என்று வருந்தினான். அவள் மீது அவனுக்கு மிகப்பெரிய மரியாதை உருவானது, ஆனால் அதற்கு ஐந்து வருடங்கள் தேவை பட்டது.
நண்பர்களே உங்கள் காதலை ஏற்காத பெண்ணின் மேல் கோபம் கொள்ள வேண்டாம். ஏற்கவில்லை எனில் ஒரு தோழியாக இன்னும் அதிகமாக நேசியுங்கள் இல்லையெனில் விலகிச் செல்லுங்கள், ஒரு ஐந்து வருடத்திலோ அல்லது ஏதேனும் ஒரு தருனத்தில் நிச்சயமாக நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.
Dedicated to Swathi.