நா கண்ணுக்குத்தி கப்பாலிடா
வாடா கண்ணுக்குத்தி கப்பாலி. இவ்வளவு நாளா எங்க வலைல மாட்டாம தப்பிச்சிட்டிருந்த. இன்னைக்கு வசமா மாட்டிடா.
@@@@@@@@@@@@
அய்யா என்னை நீங்க ஒண்ணும் பிடிக்கல. எனக்கு செய்திதாள்ல இலவச விளம்பரம் வேணும்னு தான் நானா இங்க வந்தென்.
@###
டேய் கண்ணுக்குத்தி நீயா வந்தாலும் நாஙக பிடிச்சாலும் நாங்க உன்ன வலை வீசிப் பிடிச்சோம்னுதாண்டா செய்தி வெளியாகும்.
சரி உம் பேரு என்ன வித்தியாசமா இருக்குதே?
@@@@@
இன்ஸ்பெக்டர் அய்யா. கபாலிங்கற பேருல நம்ம சென்னை மாநகரிலெ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ரவுடி இருக்கறான். அதனால
தான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்னு நா எஞ் சொந்தப் பேரு ’கபாலி’ங்கறத ’கப்பாலி’-ன்னு மாத்திட்டேன்.
@@@@@@@@@@@@@
சரிடா கப்பாலி, கண்ணுக்குத்தின்னு உனக்கு எப்பிடிடா பட்டப்பேரு வந்துச்சு?
@@@###
அதெல்லாம் நீங்க செய்திலெ படிச்சிருப்பீங்க, பாத்திருப்பீங்க. அத நா எதுக்கு அய்யா சொல்லணும்?
@@@@@@@@@
பரவால்ல சொல்லுடா கப்பாலி.
@@@@@@@@@@@
சார் நா வழிப்பறி செய்யறபோது எங்கிட்ட மாட்டறவங்கலோட பொருள், பணம், தங்கச் சங்கிலிய புடுங்கிட்டு அவுங்க கண்ணுல
ஒரு குத்துவிட்டுட்டு ”நா கண்ணுக்குத்தி கப்பாலிடா”ன்னுசொல்லிட்டு தப்பிச்சு போயிடுவேன்.
@@@@@@@@@@@@
யோவ் ஏட்டு இந்தக் கண்ணுக்குத்தி கண்ணுல ஒரு குத்துவிட்டு ‘லாக்கப்’ல தள்ளுயா.