அரசன் இல்லேன்னா புருஷன்•••
குளக்கரையில்)
என்னம்மா தங்கச்சி நீ தான் அந்த ஊருக்கு வாக்கப்பட போனவளா" (என கேட்டாள் கோமதி)
"அந்த ஊருக்கு வாக்கப்பட போவல எனக்கு தாலி கட்டின ஆம்படியானுக்கு வாக்கப்பட போனவ•••" (புள்ளை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுற மாதிரியில்ல இருக்கு இவங்க கேக்கிற கேள்வி என நினைத்தபடி பதில் சொன்னாள் அமுதவள்ளி•••!)
" பொண்ணு வெவரமாத்தான் பேசுறா ஆமாம் ஊருக்குள்ள ஒரு மாதிரியா பேசிக்கி றாங்களே அது நெசந்தானா"•••(லாகவமா கேட்டாள் கோமதி••!)
"என்னான்னு பேசிக்கிறாங்க"
"ஆம்படியான் கண்ண மறைச்சி மச்சனனோடேயும் மூத்தாரோடேயும் பழக்கமா இருக்கியாமே"
"ஆமாம் அதுக்கென்ன இப்போ"
"அப்போ ஊருசனம் பேசிக்கிறது நெசந்தான் போல இருக்கு "••••• சரி நான் வாரேன் (குடத்தை தூக்கி இடுக்கில் வைக்க••••!)
" இந்தாங்க•••••கொஞ்சம் நில்லுங்க•••••யார் யாரோ ஒரு மாதிரியா பேசிக்கிறாங்கன்னீங்களே அவுங்ககிட்ட போயி சொல்லுங்க"
"என்னான்னு சொல்ல"
" நீங்க கேட்ட மச்சினனும் மூத்தாரும் ஆம்படியானும் ஒரே ஆளுதான் அவருக்கு அண்ணனும் கெடையாது தம்பியும் கெடையாது அவரு அந்த வீட்டுக்கு ஒரே பையன் அதிலே உனக்கு நம்பிக்கை இல்லேன்னா நீயே போயி அது நெசமா பொய்யான்னு தெரிஞ்சிக் கிட்டதுக்கப்பறம் அவுங்க கிட்ட போய் சொல்லு உனக்கு அவசியம் இருந்தா இப்போ பொங்க " (வாழை பழத்தில ஊசியால குத்துறாப்போல குத்தினா அமுதவள்ளி•••!)
" நெசமாவா••• அட தெய்வமே ஒரு பொண்ணு மேல இப்படியா பழிய பொடுறது என்னா ஊரோ இந்த ஊரு இருக்கிறத பறக்குதுங்கிறாங்க பறக்கிறத இருக்குதுங்கிறாங்க யம்மா இந்த ஊர்ல வாழமுடியாது பொல இருக்கே••• நான் போயி இப்பவே மூட்டைய கட்டிக்கிட்டு என் ஆத்தா ஊருக்கே போயிடுறேம்மா என் ஊட்டுக்காரன் வந்தா வரட்டும் வரலன்னா போவட்டும் நான் கேட்டேனேன்னு எம்மேல கோவிச்சிக்காதேம்மா"
"ஐயையோ ஏங்க இப்படி தப்பான முடிவு எடுத்தீங்கன்னா உங்க காதுல ஓதனவங்கள யார் திருத்துவது"
"ஆமாம் அமுதவள்ளி"
"அதுக்கில்லீங்க இவங்கள இப்படியே விட்டுவச்சா இப்போ நாலு பேர் நாளைக்கு எட்டு பேர் இப்படியே விட்டா நீங்க வேற முழுகாம இருக்கிறீங்க, உங்களுக்கு ஒரு போண்ணு பொறந்து அவள பெரியவளாக்கி கட்டி கொடுத்த பிறகு இப்போ பேசரவளுங்க நாளைக்கு உங்க பொண்ணையும் இப்படி பேச மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் இந்த பணத்த புடி நாளைக்கு இரண்டு ஊரு தாண்டினா மூனாவது ஊருல எறங்கி என்னையபத்தி நல்லா விசாரிச்சிப்புட்டு••••"
"இல்லம்மா இன்னைக்கு இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டிடுறேன்ம்மா
மொதல்ல என்னோட மாமியாருகிட்டே இருந்து ஆரம்பிக்கிறேன்"
"ஓஹோ.....இதுக்கெல்லாம் காரணம் உன்னோட மாமியார் தானா" என நினைத்தாள் அமுதவள்ளி
கோமதியோட மாமியார் "ஏண்டி தண்ணிய தூக்கியார இவ்வளோ நேரமா அங்க யாருக்கிட்டடி பேசிக்கிட்டிருந்தே"
"ஆமாம் கோழுந்தனாருக்கிட்டே, மூத்தாருக்கிட்டே இவ்ளோ ஏன் அங்க கோளத்துல எவனெவன் கண்ல பட்டானோ அவங்கிட்டெல்லாம் பேசிட்டு வர நேரமாயிடுச்சி" கோமதி
"என்னடி நான் அமுதவள்ளிக்கு பாடின பாட்டையெல்லாம் ஒன்னுவிடாம நீ ஏங்கிட்ட பாடி காட்டுறே" கோமதியோட மாமியார்
"இந்தா பணம் வண்டி சார்ஜ்க்கு••• அவ தாலி கட்டிக்கிட்டு போன ஊர்ல போய் விசாரி••• அவளோட புருஷனோட கூட பொறந்தவங்க எத்தனப்பேருன்னு•••• அவ புருஷன் ஒருத்தன் தான் அவனுக்கு வேற அண்ணன் தம்பிங்களே கெடையாது
அது தெரியாம•••ச்சா" விலாசினா கோமதி
"அது எனக்கும் தெரியும் அவ பருஷனுக்கு அண்ணன் தம்பி யாரும் கிடையாதன்னு" கோமதியோட மாமியார்
"அப்படி தெரிஞ்சிருந்துமா ஒரு வாழ்ப்போற போன்னுமேல இப்படி அபாண்டமா பழிய போட்ட"
கோமதி
"அவளோட அப்பன் அவமானம் தாளாம தூக்குல தொங்கனும் அத நான் என் கண்ணால பாக்கனும் அப்போதான் என்னோட நெஞ்சில எரிஞ்சிக்கிட்டிருக்கிற நெருப்பு அணையும்" கோமதியின் மாமியார்
"இவர்கள் பேசிக்கிட்டிருந்ததை கேட்டுக்கிருந்த கோமதியின் புருஷன் அம்மா அறிவிருக்கா உமக்கு வெந்ததை திண்ணுட்டு வாயில வந்ததையெல்லாம் பேசிக்கிட்டு மறுபடியும் எதாவது பேசினா கோன்டேபுடுவேன் நீ எந்திரு துணிமணி எல்லாம் சுருட்டிக்கிட்டு உன்னோட பெரிய மகன்கிட்டேயே போயி இருந்துக்கோ போ கெளம்பு கெளம்பு ஒரு நிமிஷங்கூட என் கண்ணெதிர்ல பட்டே இன்னைக்கு நீ பொணம்தான் ஆமாம் சொல்லிப்புட்டேன்"
"நீங்க எங்கேயோ போவனுமின்னீங்களே போங்க அவுங்க பொருமையா போயிக்குவாங்க" பருஷன ஒரு வழியா அனுப்பிவிட்டு "அத்த அப்படி என்ன கோபம் அமுதவள்ளியோட அப்பா மேல" என கோமதி கேட்க
"ம்•••• என்னைய கட்டிக்கிறேன் கட்டிக்கிறேன்னு சக்கையாக்கி கிடாவிட்டு வேற எவளையோ கட்டிக்கிட்டான் அவளோட அப்பன் காத்தகன் கழுத்த அறுத்தவன் என்னை நம்ப வச்சி மோசம் பண்ணவன்"
"ஓஹோ இதுதான் சங்கதியா" என நினைத்து. க்கொண்டாள் கோமதி
"என்னை விடுடி நான் போறேன் உன்னோட ஊட்டுக்காரன் மூர்க்கன் சடாள்னு அடிக்க வருவான் நான் கொஞ்ச நாளைக்கு பெரிய மகன்கிட்டேயே கெடந்துட்டு வாரேன்•••••
உன்மேல எனக்கிருக்கும் அக்கரயால என் மறுமக எவங்கிட்டேயும் சிரிச்சி பேசிடக்கூடாதேன்னுதான் உன்னைய பயமுறுத்தி வக்கிறதுக்காக ஊங்கிட்ட பொய்யை சொன்னேன் என்னைய தப்பா நெனைனக்காதே என்னா"
என்று பரிவோடு சொன்னாள் கோமதியின் மாமியார்
இந்த வயசிலேயும் இந்தக் கிழவிக்கு ஆசையப்பாரு, ஒரு பொம்பள நெனைச்சா அவ நெனைச்சத அடையரத்துக்கு அவ என்ன வேனுமுன்னாலும் பண்ணுவா போல இருக்கு நல்ல வேள நாம அத ஆப் பண்ணிட்டோம்,
அடைந்தால் அரசன் அடையாட்டி இருக்கிறதே இருக்கிறான் புருஷன்
அந்த கேட்கரி போல இருக்கு பொம்பள.
குளக்கரையில்
" என்னம்மா கண்ணு விஷயம் ஒனக்கு தெரியுமா
இம்புட்டுக்கும் காரணம் ஏம்மாமியார்தான் புள்ள, நான் எங்கேயாச்சும் கைமாரிடுவேனோன்னு என்னையே பயமுறுத்தி வைக்க உன்னை தண்டாயுதமா கையாண்டு இருக்கா புள்ள" கோமதி
"தெரியுமே" அமுதவள்ளி
"இன்னொரு சவாரசியமான ரகசியத்த சொன்னா கெழவி" கோமதி
"அந்த ரகசியம் எங்க அப்பாவப் பத்திதானே" அமுதவள்ளி
"எங்க அப்பாவ பழிவாங்கனும் அவுங்களுக்கு இதுல எங்கப்பா சம்மந்தப்பட்ட விஷயமா இருந்ததால இந்த அவதூர முள்ளுல விழுந்த துணிகளை எடுக்கிறமாதிரி எடுத்துட்டேன் இல்லேன்னா அவகதைய தெருவில கொட்டி தொடப்பக்கட்டையால கூட்டி முறத்தில வாரி பொடைபொடைன்னு பொடைச்சிட்டில்ல இருந்திருப்பேன் இன்னும்
யாராவது இருக்காங்களா பாரு அவங்களையும் ஒரு வழி பண்ணிடுவோம்"
அமுதவள்ளி.