கபாலி டிக்கெட் விலை
“டிக்கெட் எவ்ளோ ஸார்..?”
‘ஐநூறு ரூபாய்ங்க..’
கணக்கு போட்டுப் பாத்தான் , குடும்பத்துல உள்ள நாலு பேருக்கும் சேத்து ரெண்டாயிரம் ஆகுது..
மனைவி , பிள்ளைகள அழைச்சிக்கிட்டு தியேட்டர விட்டு வெளிய வந்து ஆட்டோவில ஏறுனான்..
‘எங்க ஸார் போகணும்..?’
“பக்கத்துல உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு போங்க..”
ஆட்டோ விரைந்தது...
“ஸார்.. இங்க இருக்குற முதியோர்களுக்கு மதிய சாப்பாடு குடுக்கணும்னு ஆசப்படுறேன்.. எவ்ளோ ஆகும் ஸார்..”
‘ஆயிரத்தி ஐநூறு ஆகும்ங்க..’
“இந்தாங்க ஸார்.. ரெண்டாயிரம் ரூவா இருக்கு..”
பணத்த குடுத்துட்டு வெளிய வந்தான்..
மரத்தடியில நின்ன அந்த பெரியம்மா கையெடுத்து கும்புட்டாங்க..
#புள்ள_குட்டிகளோட_நீங்க_நல்லாருக்கணும்_ராசா...