இப்படியும் சில காதல்

மீன்களுக்கு பதில்
பெண்களுக்கு
கண்களால் போடப்படும்
தூண்டில் பெயரோ காதல்

பெண்ணின் காதல்
மயிலிறகின் மழலை
ஆணின் காதல்
மந்தியின் மழலை

அது மரம் விட்டு மரம்
ஏறுவதல்ல
மனம் விட்டு மனம்
மாறுவது

அது அகத்தை பார்த்து
வருவதல்ல
அழகைப்பார்த்து
வருவது

இதில் மனிதனை
மன்மதன் வென்று விடுகிறான்
காதலெனும் சட்டையை
காமம் அணிகிறது

இங்கே நட்பு
கதலாவதில்லை
காதல் கடைசியில்
நட்பாகிறது

மணந்துகொள்கிறேன்
என்ற வார்த்தை
கடவுச்சொல்லாகிறது

மன்னித்துக்கொள்
என்ற வார்த்தை
கடைசி சொல்லாகிறது

இந்த நாடகத்தில்
பூக்களும் நீதியும்
மட்டும் ஊமையவதில்லை
பூவையரும்தான்

இறுதியில்
கசங்கிய பூக்களோடு
அவள்
இரு கையில் பூக்களோடு
அவன் அடுத்த காதலுக்காக

எழுதியவர் : குமார் (21-Jul-16, 9:43 pm)
பார்வை : 697

மேலே