பூந்தோட்டம் கண் சிமிட்டும் நேரம்

வாடி தங்கம் கருப்பாயி. அமெரிக்கா போயி அஞ்சு வருசம் கழிச்சு உம் பாட்டியைப பாக்க வந்திருக்க. உனனோட ரண்டு கொழந்தைளும் ரோம்ப அழகா இருக்கறாங்கடி. சரி அவுங்க பேரு என்னடி கருப்பாயி.

@%%@
பாட்டிம்மா நா எங் கலயாணத்து முன்னாடியே கருப்பாயிங்கற எம் பேர ஷியாமளா-ன்னு மாத்திட்டேன்.
திரும்பத் திரும்ப எம பழைய பேரச் சொல்லி என்னக் கிண்டல் பண்ணாதீங்க.
##%#
நா எனனடி பண்ணட்டும் உம் புதுப்பேர சிய்யாமலலா -ன்னுதாங் கூப்படமுடியும்.

#%%#
சரி சரி. கருப்பாயின்னு என்னக் கூபபடறதவிட சிய்யாமளா-ன்னா கூப்பிடுங்க.
@%#@
சரிடி சிய்யாமல்லா. இன்னம் உன் பிள்ளைங்க பேரச் சொல்லவே இல்லையே.
@##@
சரி பாட்டி. பையந்தா மூத்தவன். அவம் பேரு பூந்தோட்டம். பொண்ணு பேரு கண் சிமிட்டும் நேரத்தில்.
##%@#
அடடா எஞ் செல்லப் பேத்தி. உம் பிள்ளைங்களுக்கு அழகான தமிழ்ப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வச்சிருக்கற நீ மகராசிடி.
@%@@@
பாட்டி நா எம் பேரு கருப்பாயி-ங்கற தமிழ்ப் பேரயே ஷ்யாமளா-ன்னு மாத்திட்டேன். ஷ்யாமளா-ன்னு பேர மாத்தினாலும் தமிழ்ல கருப்பாயிக்கு உள்ள அர்த்தம்தாம் ஷ்யாமளா-ங்கற இந்திப் பேருக்கும்.
@%%@@
சரி உம் பிள்ளைங்களாவது அழகான தமிழ்ப் பேருங்கள வச்சிருக்கறயேன்னு நா ரொம்ப பெருமப் படறண்டி சிய்யாமல்லா.
@#%@@
பாட்டி அமெரிக்காவிலே வாழ்ந்திட்டு இருக்கற எனக்கு பைத்தியமா பிடிச்சிட்டு இருக்குது எம் பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேர வைக்கறதுக்கு. நான் சொன்னது எம் பிள்ளைங்களுக்கு நானும் என்னோட கணவரும் வச்ச இந்திப் பேருங்களோட அர்த்தம்தாம் பாட்டிம்மா.
@%%@@
அடி போடி கருப்பாயி. நீ அமெரிக்கா போயும் திருந்தல. சரி போன போகுட்டும். அந்த இந்திப் பேருங்களாயாவது சொல்லுடி கருப்பாயி. இந்திப் பேரு வெறி பிடிச்சு அலையற உன்ன நாங்க உனக்கு வச்ச பேரச் சொல்லிதாதாங் கூப்புடுவேன்.
@%#@@
சரி நீங்க என்னமோ சொல்லி கூப்படுங்க. நா இங்க இன்னும் 10 நாளைக்குத் தானே இங்க இருக்கப்போறோம். பையம் பேரு குல்ஷன் ; குல்ஷன்-னா பூந்தோட்டம்னு அர்த்தம். பொண்ணுப் பேரு நிமிஷா. நிமிஷா-ங்கற பேருக்கு கண் சிமிட்டுதல்,கண் சிமிட்டும் நேரம், மிகச் சிறிது நேரமே இருக்கும்-ங்கற அர்த்தங்கள் இருக்குது பாட்டிம்மா.
#%#@
அதெல்லாம் சரிடி. குல்லுசன்னு உம் பையனுக்கு வச்ச அந்த இந்திப் பேருக்கு பதிலா பூந்தோட்டம்-ங்கற தமிழ்ப் பேர வைக்கறது கேவலமா? உம் பொண்ணுக்கு கண்ணச் சிமிட்ற நேரம்-ங்கற பேருக்கு பதிலா கண்மணி-ங்கற அழகான தமிழ்ப் பேர வச்சா நம்ம குடி முழுகிப் போயிடுமா இல்ல ஒலகம் அழிஞ்சு போயிடுமா?
@#%%
என்ன பாட்டிம்மா செய்யறது. உலகம் போற போக்கிலதானே நாமளும் போயாகணும்
@###@@
ஆமாண்டி பத்தோட பதினொண்ணா இருங்கடி.ஆயிரத்திலே ஒருத்தியா இருக்காதடி.

@##%%$$$$$$$@@@@@@##%#@@@@##
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (22-Jul-16, 1:14 am)
பார்வை : 272

மேலே